--- --:--:-- --

டைரக்டா- ஓடிடி-யில் வெளியாகும் “அன்பறிவு”படம்?

xvb

இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’.இப்படத்தை அஸ்வின் ராம் இயக்கி உள்ளார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார்.நெப்போலியன், வித்தார்த், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

‘அன்பறிவு’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon