கொலையாளியை கண்டுபிடிக்கவில்லை: “சிபிஐடி விசாரிக்க வேண்டும்” மகனை இழந்த பெற்றோர் திருப்பூர் கலெக்டரிடம்  மனு 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் பி.நாகராஜ்(45) இவரின் மகன் கோபிநாத்(20) கடந்த  ஜூலை18-ம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் மடத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது,  அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கோபிநாத்தை ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட ஓடவிரட்டி பயங்கர ஆயுதத்தை வைத்து அடித்ததில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைபாா்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாா் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனையறிந்த கோபிநாத்தின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர், போலீசாா் கொலையாளிகளை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது குறிப்படத்தக்கது.

சிபிஐடி விசாரிக்க வேண்டும்:

 

இந்த நிலையில் கோபிநாத்தின் பெற்றோர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், எனது பெயர் நாகராஜ்(45) முகவரி.504 காமராஜ் நகர், வீராச்சிமங்கலம் தாராபுரம் பகுதியில் வசித்து வருகிறோம்.  நாங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள். எனது மகன் கோபிநாத்(20) இவரை மூன்று மாதத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் பலத்த ஆயுதத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

 

கொலைக்கான காரணம் எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. எங்கள் மகனை இழந்து பெரும் துயரத்தில் உள்ளோம். கொலை தொடா்பாக இதுவரை ,போலீசார்  குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் காலம்தாழ்த்தி வருகிறது. எங்களுக்கு போலீஸ் மீது  நம்பிகையில்லை. இந்தக் கொலை வழக்கை விசாரிக்க உடனடியாக சிபிஐடி- க்கு மாற்றி  பரிந்துரை செய்ய வேண்டும் என்று இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

திருப்பூா் மு.ராஜா