95 வயது மூதாட்டியை தீ வைத்து எரித்து கொன்ற பேரன்..!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 95 வயது மூதாட்டியை எரித்துக் கொன்ற நபரை கைது செய்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கமலம் கிராமத்தில் வசித்து வந்த செல்லம்மாள் என்ற 95 வயது மூதாட்டியை அவரது பேரன் அஜித்குமார் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அவரது வீட்டின் முன்பு பிளாஸ்டிக் பைகள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
அதனுடன் இரண்டு வளர்ப்பு நாய்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. அஜீத் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சாமி கிட்ட கேட்டேன் சாமி அனைத்தையும் எரித்து விடு என்று கூறியதனால் அனைத்தையும் தீ வைத்து ரிடுத்து விட்டேன் என்று கூறியதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






