--- --:--:-- --

திருமண விழாவில் கூடுதலாக சாப்பிட்டவருக்கு பில் அனுப்பிய தம்பதி..!

12

திருமண விழாவில் கூடுதலாக சாப்பிட்டவருக்கு பில் அனுப்பிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றின் போது பரிமாறப்படும் விருந்தினர்களிடம் கேக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

 

அதாவது திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் அனைவருக்குமே திருமண கேக் வழங்கப்படுமாம். ஆனால் அந்த கேக் சாப்பிடுவதற்கு திருமண விழாவிற்கு முன்பாகவே கட்டணம் செலுத்த வேண்டுமாம். இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்ற விருந்தினர் ஒருவர் இரண்டு துண்டுகள் கேக் சாப்பிட்டுள்ளார்.

 

அப்பொழுது அது குறித்து யாரும் அவரிடம் கேட்கவில்லை. திருமணம் முடிந்து தேனிலவு சென்று திருமண தம்பதிகள் தங்கள் திருமண நாளில் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளனர். அப்பொழுது தங்களின் உறவினர் ஒருவர் இரண்டு துண்டு கேக் சாப்பிட்டு வந்துள்ளனர்.

 

இதனையடுத்து கூடுதலாக ஒரு துண்டு சாப்பிட்டு சிசிடிவி காட்சியை சம்பந்தப்பட்ட நபரிடம் செல்போன் எண்ணிற்கு புதுமண தம்பதிகள் அனுப்பியுள்ளனர். ஒரு துண்டு கேக்கிற்கு பணம் செலுத்திவிட்டு இரண்டு துண்டு கேக் சாப்பிட்டு உள்ளீர்களே என்று அவர்கள் கேட்டுள்ளனர்.

 

நாங்கள் சிசிடிவியில் பார்த்து விட்டோம் எனவே அதற்கு உரிய பணத்தை அனுப்புங்கள் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon