15 வயது சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்!
குன்றத்தூர் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றியதாக போலி சாமியார் ஒருவர் கைதாகியுள்ளார். போலீசாருக்கு உதவியாக அவரது தாய், தந்தை, அண்ணன் உட்பட 7 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் குமரன் என்பவர் சாமியாராக உள்ளார்.
அவர் தனது அண்ணன் மனைவி தங்கையான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பின்னர் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் திருமணத்திற்கு பின் சிறுமியை பாலியல் கொடுமை செய்துவிட்டு வீட்டைவிட்டு துரத்தி விட்டு வேறு திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரது தாய், தந்தை உட்பட 7 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.






