உணவு விநியோகிக்கும் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு..!
உணவு வினியோகிக்கும் பணியாளர்களுக்கு உதய்ப்பூர் வணிக வளாகம் விதித்திருக்கும் கட்டுப்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் உணவு விநியோகிக்கும் பணியில் உள்ள சுவிக்கி மற்றும் ஜோமெட்டோ பணியாளர்கள் மின்தூக்கியை பயன்படுத்தக் கூடாது என்றும் படிக்கெட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கட்டுபாடு விதித்திருக்கிறது.
இதுகுறித்து சமூக வலைதளங்கள் வழியாக தகவல் வெளியாக அனைவரும் உணவு வினியோகிக்கும் பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு உணவு வினியோகிக்கும் பணியாளர்கள் தங்கள் இடத்தில் உள்ள கழிவறையைப் பயன்படுத்த தடை விதித்திருக்கிறது.
உணவு வினியோகிக்கும் பணியாளர்களும் மனிதர்களே அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது அனைவரின் கடமை என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
விரும்பும் உணவை நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தரும் சிறப்பான பணியை செய்து வரும் உணவு விநியோகிக்கும் பணியாளர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம் எனக் கூறியுள்ளனர்.






