--- --:--:-- --

இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

1

வரும் முன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முகஸ்டாலின் காலை 9 மணியளவில் தனி விமானம் மூலமாக சேலம் சென்றடைகிறார்.

 

அங்கு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். அங்கிருந்து புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு வரும் முன் காப்போம் திட்டம் மருத்துவத்தை தொடக்கி வைக்கிறார்.

 

அதனை தொடர்ந்து ஆத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்துவைக்கிறார். வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் உழவர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 208 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் 28 திட்டப்பணிகளை திறந்துவைக்கிறார்.

 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்து துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை போன்ற துறைகளில் 23 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கும் 13 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

ஆத்தூரில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தில் ஜவ்வரிசி உற்பத்தியை பார்வையிடும் முதல்வர் மரவள்ளிக்கிழங்கு, விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon