தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் இரண்டாம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






