--- --:--:-- --

இனி தண்ணீரை சாப்பிட முடியும்..!

4

போத்தலில் அடைக்கப்பட்ட நீரை குடித்து முடித்த பின்னர் அந்த போத்தலை உண்ண கூடிய வகையிலான ஒரு போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மாணவர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த உண்ணக்கூடிய நீர்போத்தல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் கடந்த சில வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பலனாக இந்த உண்ணக்கூடிய போத்தலை ஒரு மாணவன் கண்டுபிடித்துள்ளான். இந்த போத்தலை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களாக குறிப்பிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

கவுன்சர் மற்றும் அவரது குழுவினர் நீர் பந்தை எடுத்து வழவழப்பான நீர் அடுக்கை தோற்றுவித்துள்ளன. இந்த உண்ணக்கூடிய நீர் போத்தல் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் வர்த்தகத் துறையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்த இது குறித்து மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென இதனை கண்டுபிடித்த மாணவன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon