பானிபூரி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு..!
ஈரோடு அருகே பானி பூரி சாப்பிட்ட பின் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பானிபூரி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
காலனியை சேர்ந்த ரோகிணி தேவி என்பவர் 3 நாட்களுக்கு முன்பு பானி பூரியை சாப்பிட்டதும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்ததற்கு அவர் சாப்பிட்ட பானிபூரி தான் காரணம் என பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பானிபூரி கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகார் அளிக்கப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர்.
முன்னதாக உயிரிழந்த பெண் பானிபூரி மட்டுமின்றி குஸ்கா உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிட்டதாக கூறும் அதிகாரிகள் உடற்கூராய்வுக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனக் கூறியுள்ளன.






