தங்களுக்கு பல் வளர நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு கடிதம் ..!
அசாம் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல் சிறுமியின் சகோதரரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருவரும் எழுதிய கடிதத்தில் தங்களுக்கு பற்கள் விழுந்து விட்டதாகவும் அவை மீண்டும் வராததால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
பற்கள் விழுந்து விட்டதால் தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சிறுவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதங்களை சிறுவர்களின் உறவினர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.






