--- --:--:-- --

உத்திரப்பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி..!

5

உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அலிகாரில் ராஜா மகேந்திரசிங் பல்கலைக்கழகத்திற்கு இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். உத்திரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

 

இதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக மேலிடத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளை தொடங்கியுள்ளனர். உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்க இருப்பதால் உத்திர பிரதேச தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் இன்று உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி ராஜமகேந்திரன் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதை தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon