டெல்லியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம்..!
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில தினங்களாக தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறு போல் போகிறது.
இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தின் சில பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.






