--- --:--:-- --

கனடா பிரதமர் ஜஸ்டின் மீது கல்வீச்சு..!

12

தேர்தல் பிரச்சாரத்தின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் மீது கல்வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. வரும் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ஜஸ்டின் நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 

ஆனால் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வரம்புகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டங்களால் ஜஸ்டின் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. லண்டன் நகரில் பிரசாரத்தை முடித்துவிட்டு வாகனத்தில் ஏறும் போது அங்கிருந்து போராட்டக்காரர்கள் கற்களையும் குப்பைகளையும் அவர் மீது வீசினர்.

 

அவரின் தோள்பட்டையில் விழுந்த அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். எனினும் இந்த கல்வீச்சில் அவருக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon