சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்..!
சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பையனூர் பங்களா உள்ளிட்ட 50 ஏக்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டன.






