5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி பரிதாபமாக பலி..!
கர்நாடகாவில் 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மைசூருவில் சிறுமி ஒருவர் அவளது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென விழுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சிறுமியை உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் அவரது தொண்டையில் இருந்த நாணயத்தை வெளியே எடுக்க முயன்றும் முடியாததால் சிறுமி உயிரிழந்தார்.






