--- --:--:-- --

சென்னையில் 340 கோடியில் புதிதாக 3 மேம்பாலங்கள்..!

13

முதலமைச்சரின் கனவு திட்டமான சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு சுத்தமான மற்றும் பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சென்னை டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

 

இந்த திட்டத்தின் ஒரு கட்டமாக சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுமார் 340 கோடியில் புதிதாக 3 மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

தியாகராயநகரில் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணாசாலை வரை 90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஓட்டேரி நல்லா அருகே 75 கோடி மதிப்பீட்டிலும் இரண்டு வழி மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon