பல்லால் ரிப்பனை வெட்டி கடையை திறந்த அமைச்சர்..!
பாகிஸ்தான் அமைச்சர் பயாஸ் உல் ஹசன் ஒரு கடையை திறந்தபோது கத்தரிக்கோல் சரியாக இல்லாத காரணத்தால் பல்லில் ரிப்பனை கடித்து துண்டாக்கி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடை திறப்பிற்கு மக்கள் அரசியல்வாதிகளை அழைப்பது வழக்கம் இல்லை.
அப்படி இருக்கையில் பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் தன் தொகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையை திறக்க விருந்தினராக அழைக்கப்பட்டார். ரிப்பனை வெட்டும் போது கத்தரிக்கோல் சரியாக வெட்டவில்லை.
இதனால் பொறுமை இழந்த அமைச்சர் தனது பற்களால் கடித்துள்ளார். அதுமட்டுமின்றி தன் பற்களால் கடித்து ரிப்பனை வெட்டிய வீடியோவை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.






