குழந்தை பாலியல் சீண்டல் தொடர்பான கதைக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது..!
2020 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு புகழ்பெற்ற பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இதேபோன்று சிறந்த படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.






