--- --:--:-- --

பெண் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கூறிய மீரா மிதுன்..!

2

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பரின் இரண்டாவது பிணை விண்ணப்பத்தையும் சென்னை அமர்வு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மற்றும் அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

 

இந்த நிலையில் மறுபடியும் பிணை கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தனர். 20 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாலும் பல படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்து உள்ளதால் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும் தான் பெண் என்பதை கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

 

இந்த விண்ணப்பம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பட்டியல் இன மக்களை புண்படுத்தும் வகையில் மீராமிதுன் பேசியுள்ளதாக பேசியிருப்பது சமுதாயத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் இதில் பாலின ரீதியான முடிவு வழங்க கூடாது எனவும் தற்போது பிணை வழங்கினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon