காவலர்கள் முன்னிலையிலேயே காதல் ஜோடிக்கு கத்திக் குத்து..!
நெல்லையில் காவல்நிலைய வாசலில் வைத்து காவலர்கள் முன்னிலையிலேயே காதல் ஜோடியை கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரும் ரம்யா என்பவரும் காதலித்து ராமயன்பட்டி விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பேட்டை காவல் நிலையத்தில் மணக்கோலத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு வந்த இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே ரம்யாவின் சகோதரரான ராம்குமாரும் இணைந்து ஆனந்த ராஜ்ஜை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ரம்யாவின் தந்தை சண்முகசுந்தரம், சகோதரர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.






