கோவை மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்..!

கோவை மாவட்டத்தில் கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

அதன்படி கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் துணிக் கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிறு அன்று இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து பூங்காக்களிலும் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

 

அனைத்து பணிகளும் இன்றும் நாளையும் செயல்படதடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

உணவகங்கள், பேக்கரிகளில் மாலை 6 மணிக்கு மேல் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் 50% கடைகள் சுழற்சி முறையில் இயங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.


Leave a Reply