மணமகள் தேவை என்று விளம்பரப்பலகை வைத்துள்ள இளைஞர்..!
மணமகன் தேவை மணமகள் தேவை விளம்பரங்களை பத்திரிக்கைகளில் பார்த்திருப்போம். அதுபோல் மேட்ரிமோனி விளம்பரங்களையும் பார்த்திருப்போம். ஆனால் விளம்பரங்களைப் பார்த்திருக்க முடியாத நிலையில் இப்படியும் வரன் தேட முடியும் என்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் தன்னுடைய வீட்டின் அருகே லாட்டரி கடை ஒன்றை திறந்து வைத்து நடத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து தேனீர் கடை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
ஓரளவு நல்ல வருமானம் கிடைப்பதால் உன்னிகிருஷ்ணன் தனக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உன்னிகிருஷ்ணன் உறவினர்கள் அவருக்கு பெண் தேடி வந்த நிலையில் நல்ல வரனாக எதுவும் அமையவில்லை.
தரகர் மூலமாக ஒரு மேட்ரிமோனி மூலமாக ஒரு பெண் தேடுவதற்கு உன்னிகிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை. அதனால் தன்னுடைய தேனீர் கடைக்கு முன்பு மணமகள் தேவை என்றும் ஜாதி, மதம் தடையில்லை என்று விளம்பரப் பலகை ஒன்று வைத்தார்.
அதன் பின்னர் இந்த விளம்பர பலகையில் உன்னிகிருஷ்ணன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அவரது நண்பர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த புகைப்படம் வைரலானது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் இருந்து உன்னிகிருஷ்ணனுக்கு தற்போது அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.






