--- --:--:-- --

முதல் முறையாக இளம்பெண்கள் 2 பேருக்கு திருநம்பிக்கான அறுவை சிகிச்சை..!

4

லகத்தில் முதல் முறையாக இளம்பெண்கள் 2 பேருக்கு திருநம்பிக்கான அறுவை சிகிச்சை செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவத் துறையில் செயல்பட்டு வருகிறது.

 

இதில் திருநங்கைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வார்டில் தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

 

மதுரையை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்கள் திருநம்பிகள் ஆக மாற விருப்பம் தெரிவித்து மருத்துவர்களை நாடினர். அதன்படி அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்து இருவரையும் திருநம்பிகள் ஆக மாற்றி சாதனை படைத்துள்ளனர்.

 

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இருவரும் தற்போது உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக உள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon