--- --:--:-- --

ஆட்டோவில் தவறவிட்ட 90ஆயிரம் ரூபாய் குப்பைமேட்டில் கண்டுபிடிப்பு..!

7

திருவொற்றியூரில் ஆட்டோவில் தவறவிட்ட பணம் குப்பைமேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. புது நகரை சேர்ந்த ரவி என்பவர் டெல்லி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.

 

டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டு இருந்த போதுதான் தலையணையில் வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாயை ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

காவல்துறையினரின் விசாரணையில் ஆட்டோ ஓட்டுனர் தலையணையை குப்பைமேட்டில் வீசியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலையணைகள் எறியப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார் அதில் இருந்த பணத்தை மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon