ரசிகர் பட்டாளத்தின் நடுவே சிக்கியபோதும் மாறாத புன்னகையுடன் இருந்த நயன்தாரா..!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ரசிகர் பட்டாளத்தின் நடுவே சிக்கியபோதும் மாறாத புன்னகையுடன் அவர்கள் எதிர்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வரும் நயன்தாராவிற்கு கோடிக்கணக்கில் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
அழகான நளினமான டிபிக்கல் ஹீரோயின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி துணிச்சலான கம்பீரமான பெயர்களையும் கதாநாயகிகள் பெறலாம் என்று காட்டியுள்ளார் நயன்தாரா. இதனால் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி பெயரை அவரது ரசிகர்கள் நயன்தாராவுக்கு சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தான் நடித்து வரும் காத்து வாக்கில் இரண்டு காதல் திரைப்படத்திற்காக அவர் செல்ல முற்படுகையில் ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்பொழுது முகம் மாறாமல் புன்னகையுடன் முகத்தை அசைத்து காரில் புன்னகையுடன் ஏறி சென்றார். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






