நடிகர் சோனு சூட்டை காண 1200 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்த நபர்..!
கொரொனா காலத்தில் இடைவிடாமல் மக்களுக்கு உதவி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை காண அவரது ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணித்துள்ளார்.
சோனுசூட் செய்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்து செல்கின்றனர். இந்த ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் ஆயிரத்து 200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணித்து அவரது மும்பை வீட்டிற்கு வந்துள்ளார்.
தனது சைக்கிளில் சோனு சூட்டின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மலர் மாலையுடன் வந்த ரசிகரை கை கூப்பி வரவேற்று சோனு சூட் அவருக்கு புதிதாக செருப்பு வாங்கி கொடுத்து வழி அனுப்பி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





