தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும்..!
தமிழ் நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அனைவரும் தடுப்புச் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் கொரொனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி இல்லாததுதான் ஒரே குறையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






