--- --:--:-- --

மனைவியை கொன்று உடலை சூட்கேசில் வைத்து எடுத்து சென்ற சம்பவம்..!

12

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மனைவியை கொன்ற கணவன் உடலை சூட்கேசில் வைத்து எடுத்துச் சென்று எரித்து நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமச்சந்திரா புரத்தில் பொருளாளராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி என்பவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று ஒரு வயதில் குழந்தை உள்ளது.

 

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என ஒரு இயக்கத்தை நடத்தி தன்னை சமூக ஆர்வலராக காட்டிக்கொண்டு ஸ்ரீகாந்த் அடிக்கடி மனைவியிடம் பணம் பெற்று செலவு செய்வதில் இருவரிடையே பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

 

தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் தாங்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் மனைவியை கொலை செய்து சூட்கேசில் வைத்து உடலை அரசு மருத்துவமனையில் எரித்துவிட்டார். டெல்டா பிளஸ் தொற்றால் அவர் உயிரிழந்து விட்டதாக கூறிய ஸ்ரீகாந்த் கூறியதை நம்பாத புவனேஸ்வரியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

 

இதையடுத்து குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை கொண்டு அவர் மீதான புகாரை உறுதி செய்த போலீசார் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon