சிவசங்கர் பாபாவை சம்பவ இடத்தில் நடிக்கக்கூறி விசாரணை..!
சுசில்ஹரி பள்ளிக்கு நேரில் அழைத்து சென்று சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சென்னை கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை இன்று மீது சிபிசிஐடி ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபா 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






