மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாற்றுத்திறனாளியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான இளைஞர் அதே பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சிங்காரப்பேட்டை அடுத்த 32 வயதான ஸ்ரீ பாலு காஞ்சனா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

 

இந்த நிலையில் ஸ்ரீ பாலுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஸ்ரீ ஸ்ரீ பாலுவின் மனைவி பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார்.

 

இந்த நிலையில் தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் 28 வயதான மாற்றுத்திறனாளி விஜயசாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் ஸ்ரீபாலு தலைமறைவாக இருந்துள்ளார்.

 

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஸ்ரீபாலுவை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் விஜயசாந்தியை அழைத்துச் சென்று உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.


Leave a Reply