--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 409 உயிரிழப்பு..!

IMG_20210531_200707

தமிழகத்தில் தற்போது 2,04,258 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 92 ஆயிரத்து 024 ஆக அதிகரித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 31,253 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 59 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் இன்று 1,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 2,319  பேரும், ஈரோட்டில் 1,405 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon