பெற்றோரை இழந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு..!
கோவையில் தாய் தந்தையை அடுத்தடுத்து இழந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
கோவை மாநகர கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, அவரது தந்தை முரசொலி வயது முதிர்வு காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியை தாங்காத அவரது தாய் சரோஜாவும் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதையடுத்து இளங்கோவன் இல்லத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் இருவரின் உருவப் படங்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.






