அலோபதி மருத்துவத்திற்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பாபா ராம் தேவ்.!
அலோபதி மருத்துவம் என்று அழைக்கப்படும் ஆங்கில மருத்துவ முறைக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்கு மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ் தமது கருத்துக்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை திரும்பப் பெறும்படி பாபா ராம்தேவுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு பதில் எழுதிய ராம்தேவ் தமது கருத்துகளுக்காக வருவதாக தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை காத்து வரும் மருத்துவத்தைப் பற்றிய பாபா ராம்தேவின் கருத்துக்கள் துரதிருஷ்டம் ஆனவை என்றும் ஹர்ஷ்வர்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அலோபதி ஒரு மடத்தனமான அறிவியல் என்று பாபா ராம்தேவ் விமர்சித்த நிலையில் அதற்கு மருத்துவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





