--- --:--:-- --

வேப்பிலையால் முக கவசம் அணிந்துள்ள சாமியார்..!

6

உத்திரபிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முக கவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.கொரொனா வைரஸ் இரண்டாவது அலையால் அந்த மாநிலத்தின் தினசரி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

 

இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்தாபூர் மாவட்டத்தை சேர்ந்த பாபா என்ற சன்யாசி நூலால் சுற்றப்பட்ட முக கவசத்தை அணிந்து உள்ளார்.

 

அதில் வேப்பிலை மற்றும் துளசி இலையை வைத்து அதனை தனது முகத்தில் அணிந்துள்ளார். மருத்துவ குணம் வாய்ந்த இரு கைகளையும் வைத்து தானே இந்த முக கவசத்தை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon