கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை குப்பை வண்டியில் தூக்கி போட்டு சென்ற சம்பவம்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை குப்பை வண்டியில் தூக்கி போட்டுக் கொண்டு சென்ற கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
தேவாஸ் மாவட்டத்தில் சௌகாஜ் நகரில் 21 வயது இளைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து இறுதி சடங்கிற்காக அவரது உடலை ஈவு இரக்கமின்றி குப்பையைக் கொட்டுவது போல சில அரசு மருத்துவமனை ஊழியர்கள் குப்பை வண்டியில் உடலை தூக்கிப் போட்டுக் கொண்டு செல்லும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து உள்ளூர் சுகாதார அதிகாரி மற்றும் 3 தற்காலிக மருத்துவ பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.






