இன்று முதல் தளர்வில்லா ஊரடங்கு அமல்..!
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். பால், குடிநீர், நாளேடுகள் ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்படுவர்.
காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலம் சென்னையிலும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக தனியார் நிறுவனங்கள், வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் இயங்கும். மின் பணிகள் சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல்கள் வழங்க மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ஜோமெட்டோ, ஸ்விக்கி வணிக நிறுவனங்கள் மூலம் உணவுகளை டெலிவரி செய்ய அதே நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும். ஏடிஎம் சேவைகள் அனுமதிக்கப்படும். வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.
சரக்கு வாகனங்கள் செல்லவும், இன்றியமையாப் பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும். உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு அனுமதிக்கப்படும் வழங்கப்படும்.
மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இப்பதிப்பு தேவையில்லை. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயக்கலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய செயல்முறை தொழிற்சாலைகள் இன்றியமையா பொருட்கள் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.






