திருப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில்,செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அவர் கூறுகையில்,
தமிழக முதலமைச்சர் அறிவுரையின்படி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்துத்துறை அலுவலர்களும்
ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
100 படுக்கை!
அதன்படி, இன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
100 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய நோயை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்
தெரிவித்தார்.
குமரன் மகளிர் கல்லூரியில் 300 படுக்கை!
தொடர்ந்து, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூாயில், அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையம், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் சுமார் 300 படுக்கைகளுடன்
அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் செய்தித்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ 5 லட்சம் நிதி
முன்னதாக,வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5.00 இலட்சத்திற்கான ரொக்கத்தினை அகத்தியன் பழனிசாமி அமைச்சரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி,மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் ஜெகதீஸ்குமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெநாதார், மாநகர நல அலுவலர் பிரதீப், திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





