--- --:--:-- --

அழுகிய நிலையில் தாயின் சடலத்தின் அருகே இருந்த குழந்தை..!

10

மகாராஷ்டிராவில் அழுகிய நிலையில் தாயின் சடலத்தின்  அருகே பட்டினியாய் கிடந்த பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

 

அந்தப் பெண்ணின் உடலுக்கு அருகில் அவரது கை குழந்தை மட்டும் இருந்துள்ளது. இறந்துபோன அந்த பெண்ணை அடக்கம் செய்யவும், குழந்தைக்கு உதவ யாரும் முன்வரவில்லை என தெரிகிறது. இதனுடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை தூக்க தயார் யாரும் முன்வராததால் பெண் காவலர்கள் உள்ள குழந்தைக்கு உணவு அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர் வேகமாக பால் குடித்ததால் இரண்டு நாட்களாக குழந்தை தண்ணீர்கூட அருந்தவில்லை என்பதை புரிந்து கொண்டதாகக் கூறினார்/ தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணின் கணவரும் வேலைக்காக உத்திரபிரதேசம் சென்றது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon