--- --:--:-- --

6 ஆயிரம் ரூபாய்க்கு சோபாவை விற்க முயன்று ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த பெண்..!

7

ணையம் மூலம் சோபாவை விற்க முயன்ற பெண்ணிடம் ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த செகந்திராபாத்தில் வசிக்கும் பெண் தனது பழைய சோபாவை பிரபல பழைய பொருட்களை விற்பனை செய்யும் செயலி மூலம் விற்க முயன்றார்.

 

அந்த சோபாவின் புகைப்படத்தை பதிவேற்றிய பின் 6,500 ரூபாய் என்று பதிவிட்டிருந்தார். அவர் பதவியேற்ற அன்று மாலையே தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவன் அந்த சோபாவை 6,500 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக உறுதியளித்தார். பின்னர் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணுக்கு கியூ ஆர் கோடு ஒன்றை அனுப்பியுள்ளான்.

 

அதனை ஸ்கேன் செய்தால் பெண்ணின் வங்கி கணக்கில் 6,500 ரூபாய் வரவு வைக்கப்படும் என்றார். இதனை நம்பிய அந்த பெண் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்த மறு நிமிடம் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 1,500 ரூபாய் எடுக்கப்பட்டதில் அந்த பெண் மர்ம நபரை தொடர்பு கொள்ள அந்த ஆசாமி தொழில்நுட்ப குளறுபடி என்று கூறி மீண்டும் கியூ ஆர் கோடு அனுப்பினார்.

 

இப்படி எட்டு முறை இந்த ஆசாமி கோடை அனுப்பியதில் மொத்தம் ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மாயமான பின்னர் அந்தப் பெண்ணுக்கு தான் ஏமாற்றப்பட்டது புரிந்துள்ளது. அந்த பெண் போலீசில் புகார் செய்துள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon