--- --:--:-- --

பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது வழக்குப் பதிவு..!

1

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ அங்குள்ள மசூதிக்கு சென்று வாக்கு சேகரித்தார் .

 

அப்போது வழிபாட்டுத் தலங்கள் முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிற.து ஆனாலும் அறிவுறுத்தலை மதிக்காமல் தொடர்ந்து குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பறக்கும் படை போலீசார் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன் பேரில் நடிகை குஷ்பு மீது தேர்தல் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon