விளைவை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் குற்றச்சாட்டு..!
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் விளைவை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிப்பதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் உடன் இரண்டு கார்கள் மட்டுமே செல்வதாகவும் ஆனால் பாஜக வேட்பாளர் அண்ணாமலையார் உடன் 30 கார்கள் செல்வதாகவும் கூறியுள்ள செந்தில்பாலாஜி இது குறித்த எந்த வழக்கும் பதியப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
தொகுதியில் அரசு அதிகாரிகள் பாரபட்சமாக நடப்பது பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக கூறிய செந்தில்பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உண்மை இல்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கட்டப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.






