--- --:--:-- --

ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் வருகிறார் பிரியங்கா!

Priyanka 02

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரசாரம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் 3ம் தேதி தமிழகம் வருகிறர்; தமிழகத்தில் அவர் மேற்கொள்ளும் முதல் பிரசாரம் இதுவாகும்.

 

தமிழக சட்டசபைக்கு வரும் 6ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஒருவாரம் கூட இல்லாத நிலையில், தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தேசிய தலைவர்களும் தமிழகத்திற்கு வருகை தந்து, தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

 

அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

 

காங்கிரஸ் தரப்பில் ஏற்கனவே ராகுல் காந்தி கோவை, திருப்பூர், கரூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். ராகுலை தொடர்ந்து அவரது சகோதரி பிரியங்கா தமிழகத்திற்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மார்ச் 27ஆம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் தேதி மாற்றப்பட்டது.

 

இந்நிலையில், தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு ஏப்ரல் 3-ம் தேதி வருகிறார். அன்றைய தினம், ஸ்ரீபெரும்புதூருக்கு வரும் பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon