--- --:--:-- --

மாணவர்களுக்கு பரவும் கொரொனா… பள்ளிகள் மீண்டும் மூடலா? அதிகாரிகள் விளக்கம்!

School students 01

கொரோனா தொற்று அதிகரிப்பால், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால், கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பரவல் ஓரளவு குறையத் தொடங்கியதும், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்பு மீண்டும் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 

இதற்கிடையே, 9, 10 மற்றும் 11 ஆம் ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. 12 வகுப்புகளுக்கு மட்டும் மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் பாஸ் என்ற அறிவிப்புக்கு பிறகு பள்ளிகளில் மாணவர்களின் வருகி வெகுவாக குறையத் தொடங்கியது.

 

இதனிடையே, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 16 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 56 மாணவ, மாணவியருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டது.

 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதாலும், கொரோனா பரவலும் அதிகரித்து வருவதாலும், தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் பரவிய இத்தகவலை பலரும் பகிரத் தொடங்கினர்.

 

ஆனால், தமிழக அரசு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது; ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon