கொரொனா தொற்றுநோய் இன்னும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது..!
கொரொனா தொற்றுநோய் இன்னும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி தான் ஏற்கனவே எச்சரித்ததுபோல கொரொனா வைரஸ் என்ற மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பொதுமக்கள் அனைவரும் கொரொனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.






