தத்தெடுத்த குழந்தையை பரமரிப்பதற்கு விடுப்பு வழங்க முடியாது..!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக் குழந்தையுடன் வந்த தம்பதியினர் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க கோரி மனு அளித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் அங்கன்வாடி பணியாளர் ஆக பணிபுரிந்து வருகிறார் பத்மாவதி.
திருமணமாகி பதினைந்து ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத காரணத்தால் மத்திய அரசின் குழந்தை தத்தெடுப்பு இணையதளம் மூலம் கடந்த 10ஆம் தேதி 3 மாத பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். தற்போது பத்மாவதிக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டு இருப்பதால் குழந்தையை பராமரிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேர்தல் பணியில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்துள்ளார். ஆனால் மகப்பேறு மூலம் குழந்தை பெற்றால் தான் விடுப்பு வழங்க இயலும் தத்தெடுக்கப்பட்ட குழந்தையைப் பராமரிப்பதற்கு விடுப்பு வழங்க வழிவகை இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.






