தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் 154 இடங்களில் போட்டியிடுகிறார்..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இந்த தேர்தலில் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரு கட்சிகளுக்கும் தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தங்களில் அந்த கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் தமிழக மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி உருவாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.






