--- --:--:-- --

கடலில் சிக்கிய பூனையை மீட்ட வீரர்..!

13

டலில் மூழ்கும் கப்பலில் சிக்கித்தவித்த 5 கடற்படை வீரர்களில் ஒருவர் பத்திரமாக மீட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனிதாபிமான பற்றிய கேள்வி எழும் போதெல்லாம் மனித நேயம் சாகவில்லை என்று நிரூபிக்கும் வகையில் உலகின் ஏதோ ஒரு மூலையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

 

மனிதனுக்கு மனிதனே அன்பு செலுத்தாத காலத்தில் வாயில்லா ஜீவன்கள் மீது சிலர் காட்டும் அன்பு ஆச்சரியத்தில் வாயடைத்து செய்துவிடுகிறது. இதில் உள்ள பேரடைஸ் தீவுக்கு அருகே கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தாய்லாந்து கடற்படை மார்ச் 2-ஆம் தேதி தகவல் வந்துள்ளது.

 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடற்படை வீரர்கள் 8 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். புக்தீன் என்ற வீரர் நான்கு பூனைகள் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை கண்டார்.

 

உடனே ஜாக்கெட்டைமாட்டிக்கொண்டு நீரில் குதித்தவர் பூனைகள் இருந்த கப்பலை நோக்கி நீந்தி சென்றுள்ளார். ஒவ்வொரு பூனையாக தனது தோளில் வைத்துக்கொண்டு மீண்டும் கடற்படை கப்பலுக்கு திரும்பி சென்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon