--- --:--:-- --

2050ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவருக்கு செவித்திறன் பிரச்சனை ஏற்படும்..!

2

2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவருக்கு செவித்திறன் பிரச்சனை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் காரணமாக காதுகேட்கும் திறன் பலருக்கும் குறைந்து வருவதால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

தற்போது உலகம் முழுவதும் உள்ள ஐந்தில் ஒருவர் செவி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவித்திறன் பிரச்சினையால் பாதிக்கப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு மடங்குக்கு மேலாக அதிகரிக்கக்கூடும் என்றும் 2.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை கடந்த 2019 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon