--- --:--:-- --

கணவனோடு சேர்ந்து ஆண் நண்பரை கொன்ற பெண்..!

1

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கணவனோடு சேர்ந்து ஆண் நண்பரை கொன்று பஞ்சுமெத்தையில் உடலை சுமந்து இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி வாயில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இருசக்கர வாகனத்தின் முன் பக்கம் மூட்டை ஒன்றை வைத்துக் கொண்டு வந்த தம்பதியை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.

 

போலீசாரை பார்த்ததும் வேகமாக வாகனத்தை இயக்கி அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அந்த பஞ்சு மெத்தையில் ரத்தவெள்ளத்தில் ஆணின் சடலம் ஒன்று இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அந்த பெண்ணோடு தவறான தொடர்பில் இருந்த மற்றொரு வடமாநில நபர் என்பதும் தெரியவந்தது.

 

தன்னோடு தன்மையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்து அந்த நபர் மிரட்டவே அதை கணவனிடத்தில் கூறியிருக்கிறார் அந்த பெண். எனவே இருவரும் சேர்ந்து அவனை கொலை செய்து இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று ரயில் தண்டவாளத்தில் வீச திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon